2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வருட இறுதிக்குள் 'அனைவரும் மீளக்குடியேற்றப்படுவர்'

Gavitha   / 2016 மார்ச் 24 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீளக்குடியேற்றல் திட்டத்தினை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்படும்.  இன்னமும் 11,000 குடும்பங்களே மீளக்குடியேற்றப்படாத நிலையில் உள்ளன. இவ்வார இறுதிக்குள் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள 250 ஏக்கர் காணி விடுவிக்கப்படும்' என புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

'இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தேவையற்ற காணிகளைக் கணக்கிட்டுத் தருமாறு இராணுவத் தலைமையகத்திடம் அறிக்கையொன்று, ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான அறிக்கை இன்னமும் எங்களிடம் கிடைக்கப்பெறவில்லை. யாரும் அகதி முகாம்களில் அநாதரவான நிலையில் வாழவில்லை. அவர்கள், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியிருக்கின்றார்கள்' என அமைச்சர் தெரிவித்தார். மேலும், 'வனஜீவராசிகள்  திணைக்களத்துக்குச் சொந்தம் அல்லாத மற்றைய திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளிலும் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மீளக்குடியேற விரும்புகின்றவர்கள் தங்களது பழைய பிரதேச செயலாளர் அல்லது அரசாங்க அதிபர் ஊடாக விண்ணப்பிக்கலாம் அல்லது  எமது உத்தியோகபூர்வ வலைதளத்தின் ஊடாக எமக்கு அறியத்தரலாம். விண்ணப்பிக்கும் நபரின் மூன்று தலைமுறைகளுக்கு வேண்டுமானாலும் மீள்குடியேற முடியும்' எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X