2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

விலைவாசி அதிகரிப்பால் பொங்கல் வியாபாரம் களையிழந்தது

Editorial   / 2022 ஜனவரி 14 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

யாழ். திருநெல்வேலி சந்தைப் பகுதியில் வழமையாக பொங்கல் தினத்துக்கு முதல் நாள், பொருள்கள் கொள்வனவு செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், வீதி முழுவதும் சனக்கூட்டம்  நிறைந்து காணப்படும்.

எனினும், இம்முறை தைப்பொங்கலுக்குப் பொருள்கள் கொள்வனவு செய்வதில்  நேற்றைய தினம் (13) பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் பரவல் ஏற்படுவதற்கு முன்னைய காலத்தில் யாழில் வழமையாக இடம்பெறும் வியாபாரத்தை போல இம்முறை பொங்கல் வியாபாரம் இடம்பெறவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினார்.

தற்போது விலைவாசி அதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருள்களுக்கான தட்டுப்பாடு காரணமாக மக்கள் இம்முறை பொங்கல் பொருள் கொள்வனவில் அதிக நாட்டம் காட்டவில்லை எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

திருநெல்வேலி பகுதியில் வழமையாக பொங்கல் தினத்துக்கு முதல்நாள் சன நெருக்கடி ஏற்படுவதன் காரணமாக, சனக் கூட்டத்தை தவிர்க்கும் முகமாக, திருநெல்வேலி சந்தையின் முன் வீதியை ஒருவழிப் பாதையாக நல்லூர் பிரதேச சபையினர்  இம்முறை அறிவித்திருந்தனர்.

எனினும், தைப்பொங்கலுக்கான பொருள்கள் கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் நாட்டம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .