2025 மே 22, வியாழக்கிழமை

வலைஞர்மடத்தில் அகழ்வுப் பணிகள் பிற்போடப்பட்டன

Editorial   / 2018 ஜூலை 31 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - வலைஞர்மடம் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் புதைத்து வைத்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில், நேற்று (31) முன்னெடுக்கப்படவிருந்த அகழ்வுப் பணிகள் பிற்போடப்பட்டுள்ளவென, பொலிஸார் தெரிவித்தனர்.

சாலை பகுதியில், விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் இடம் ஒன்றில், மாவட்ட நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய, நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில், அகழ்வுப் பணிகள் நேற்று (30) முன்னெடுக்கப்பட்டன. இன்போது, விடுதலைப் புலிகள் பயன்படுத்திய கனரக இயந்திரத் துப்பாக்கியின் தோட்டாக்களும் விடுதலைப் புலிகளின் சீருடை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, வலைஞர்மடம் பகுதியிலும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அகழ்வுப் பணி முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும், குறித்த பகுதிக்கு நீதிமன்றத் தரப்பினர் வருகை தராத காரணத்தால், குறித்த அகழ்வுப் பணி பிற்போடப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர், தேசிக்காய் வெட்டப்பட்டு, நிலத்தைத் தோண்டிய அடையாளம் இனங்காணப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பகுதியில், பொலிஸ் உடை அணிந்த சிலர், மூன்று வாகனங்களில் வந்து நின்று சென்றுள்ளதை, பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .