2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் பதவிவிலகல்

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 05 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சபை கூட்டங்களுக்கு ஒழுங்காக சமூகமளிக்க முடியாததால் உறுப்புரிமையிலிருந்து விலகுவதாக” வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் சிவசோதி நவகோடி விலகல் கடிதம் கையளித்துள்ளார்.

கடந்த உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் காங்கிரஸ் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி) சார்பில் போட்டியிட்டு வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக தெரிவான சிவசோதி நவகோடி எனும் உறுப்பினரே விலகல் கடிதம் கையளித்துள்ளார்.

அவரது வெற்றிடத்திற்கு தாமோதிரம்பிள்ளை சதாசிவம் நியமிக்கப்பட்டு உள்ளார்.

“எனது வாழ்வாதாரம் கடற்தொழில். ஆழ் கடல் தொழில் செய்வதனால் தொழிலுக்கு சென்றால் கடலில் 10 முதல் 15 நாட்கள் வரை தங்கி தொழில் செய்தே கரை திரும்புவேன். இதனால் சபை கூட்டத்துக்கு ஒழுங்காக சமூகமளிக்க முடியாது உள்ளது. அதனால் நானே விரும்பி விலகுகிறேன்” என சிவசோதி நவகோடி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .