2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் பதவி விலகல்

Niroshini   / 2021 ஜூலை 18 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக, கோணலிங்கம் கருணானந்தராசா, தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.

இதற்கமைய, ஜூலை 31ஆம் திகதியுடன் வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக, அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோணலிங்கம் கருணானந்தராசா, அந்தக் கட்சியின் நகர சபை தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில், தமிழ்த் தேசிய கட்சியை எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் ஆரம்பித்த நிலையில், அவர்களுடன் இணைந்து செயற்படுவதால், தமிழரசுக் கட்சி அவரை வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் பதவியிலிருந்து நீக்க முயற்சித்தது. எனினும் அது பின்னர் கைவிடப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நகர சபை தவிசாளர் பதவியை தொடர விரும்பாத காரணத்தால், பதவி விலகுகின்றேன் என்று, கோணலிங்கம் கருணானந்தராசா அறிவித்துள்ளார்.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கும் அனுப்பிவைத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X