Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 நவம்பர் 03 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
பாசையூர் மீனவர்களால் கடலில் விரித்த வலைகளில் சிக்கும் மீன்களை, அயல் பகுதி மீனவர்கள் திருடிச்செல்வதாக, பாசையூர் மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக ஒருகரை, பள்ளிக்குடா, மண்டைதீவு, பாலைதீவு மற்றும் பாசையூர் உள்துறை பகுதிகளில் மீன்களுக்காக விரித்துவிட்டு வரும் கலங்கண்டி வலைகளில் பிடிபடும் மீன்களை, அயல் பகுதி மீனவர்கள் இரவு நேரங்களில் திருடிச் செல்வதாக, பாசையூர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அயல் கிராம மீனவச் சங்க நிர்வாகங்களுக்கு, இவ்விடயம் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் செயற்படுவதாக, பாசையூர் மீனவர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
தொடர்ந்து இவ்வாறு மீன்கள் திருட்டுப்போவதால், என்ஜின் எரிபொருளுக்கு செலவு செய்த பணத்தினைக்கூட மீட்டுக்கொள்ள முடியாமல் உள்ளதாக பாசையூர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக வியாழக்கிழமை வலை விரித்துவிட்டு வந்தால், சனிக்கிழமையே மீன்களை எடுப்பதற்கு செல்லுவது வழமை. வெள்ளிக்கிழமை நாட்களில் தொழில் செய்வதனை பாசையூர் மீனவர்கள் தவிர்த்து வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு நேரங்களில் இந்தத் திருட்டு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. இதனால், தமக்கு ஆயிரக்கணக்கான பெறுமதியில் இழப்பு ஏற்படுவதாகவும் மீனவர்கள் கூறினர்.
இது தொடர்பில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசையூர் மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
28 minute ago
36 minute ago
48 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
48 minute ago
57 minute ago