2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வலிகாமம் தெற்கில் அபிவிருத்திப் பணிகள்

Niroshini   / 2016 ஜூன் 21 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் உள்ள 4 வீதிகள், உள்ளூராட்சி நிறுவனங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வேலைத்திட்டம் மற்றும் நெல்சிப் திட்டம் ஆகியவற்றின் கீழ் புனரமைப்பு செய்யப்படவுள்ளதாக பிரதேச சபை செயலாளர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் நந்தாவில் வீதியின் 210 மீற்றர் நீளமான வீதியும் மானிப்பாய் வீதியையும் டச்சு வீதியையும் இணைக்கும் குறுக்கு வீதியும் 4.6 மில்லியன் ரூபாய் செலவில் கொங்ரீட் வீதிகளாக புனரமைக்கப்படவுள்ளன.

நெல்சிப் திட்டத்தின் கீழ் சமாதி கோயில் வீதி 2.35 மில்லியன் ரூபாய் செலவிலும் தாவடி இந்து மயானத்துக்கு அருகிலுள்ள பாணாப்பாய் வீதி 4.19 மில்லியன் ரூபாய் செலவிலும் புனரமைக்கப்படவுள்ளன.

இதேவேளை, பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்டம் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் 4 இலட்சம் ரூபாய் செலவில் வீதிகளில் மின்விளக்குகள் பொருத்தும் பணியும் மேற்கொள்ளப்படவுள்ளதாக செயலாளர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X