2025 மே 14, புதன்கிழமை

வளர்ப்பு நாயால் உருவான தர்க்கம் வாள்வெட்டில் முடிந்தது

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

வளர்ப்பு நாயால் உருவான தர்க்கம் வாள்வெட்டில் முடிந்த சம்பவமொன்று, யாழ்ப்பாணம் – இளவாலை, சாந்தைப் பகுதியில், நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளது.

 

இதன்போது, 3 பேர்  வாள்வெட்டுக்கு இலக்காகி, தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள நபர் ஒருவரால் வளர்த்து வரப்பட்ட நாய் ஒன்று, அயல்வீட்டுக்குச் சென்றுள்ளது.

இவ்வாறு வந்த நாயை, அயல்வீட்டுக்காரர் அடித்து காயப்படுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நாய் வளர்ப்பாளர், அயல்வீட்டுக்காரரருடன் முரண்பட்டுள்ளார்.

இந்த முரண்பாடு முற்றி, அயல் வீட்டிலிருந்தவர்கள், நாய் வளர்ப்பாளர் மீதும்  வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுதுடன், அவருடைய வீட்டுக்குள் புகுந்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவத்தையடுத்து, இளவாலை பொலிஸாரால் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .