2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

வழிகாட்டல் மற்றும் உளவியல் பட்டதாரிகள் போராட்டம்

Editorial   / 2018 மே 01 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-,எஸ் ஜெகநாதன், டி.விஜிதா

வழிகாட்டல் மற்றும் உளவியல் பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்க கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இன்று (01) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடமாகாண கல்வி அமைச்சினால் நாளை (02) ஆசிரியர்களுக்கு வழிகாட்டல் மற்றும் உளநல நேர்முகத் தேர்வு இடம்பெறவுள்ளது.

இதற்காக வழிகாட்டல் மற்றும் உளநல பட்டப்படிப்பினை நிறைவு செய்துள்ள பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்காது, பட்டதாரிகள் அல்லாதோருக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே அத்துறைசார்ந்த பட்டதாரிகள், தகுதியற்றவர்களுக்கு நியமனம் வழங்க வேண்டாம் என கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .