2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வழிபறி கொள்ளையர்களுக்கு சிறை

Kogilavani   / 2017 பெப்ரவரி 23 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -செல்வநாயகம் கபிலன்

பெண்ணின் 43ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணத்தை கொள்ளையடித்த இருவருக்கு தலா 3,000 ரூபாய் அபராதமும் 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடுழிய சிறைத்தண்டனையும் விதித்து, மல்லாகம் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், புதன்கிழமை (22) உத்தரவிட்டார்.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி, புன்னாலைக்கட்டுவன் ஈவினை பகுதியில், சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த பெண்னை வழிமறித்த குறித்த இருவரும் அவர் அணிந்திருநத தங்க ஆபரணத்தை கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

இது தொடர்பில் செய்யப்பட்ட புகாரையடுத்து, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X