2025 மே 23, வெள்ளிக்கிழமை

வவுனியா விபுலானந்தா கல்லூரி குளவிகளால் சுற்றிவளைப்பு

க. அகரன்   / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா விபுலானந்தா கல்லூரியில், குளவிகள் காணப்படுவதாகத் தெரிவித்த அப்பாடசாலை அதிபர், நாளை (01) பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தரும் பட்சத்தில், ஆபத்து நேர வாய்ப்புள்ளதெனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக, இன்று  (30) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், சுமார் 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விகற்கும் இப்பாடசாலையில், அண்மைக்காலமாக ஆபத்தான தேனி வகையை சேர்ந்த பாரிய குளவிகள் கூட்டமாகத் தங்குகின்றன எனவும், அதனைத் தம்மால் அழிக்கமுடியாதுள்ளதெனவும் குறிப்பிட்டார்.

தற்போது 5 இடங்களில் இவ்வாறான கூடுகள் காணப்படுவதால், மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதெனவும் அதிபர் தெரிவித்தார்.

இது தொடர்பாக, வவுனியா அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு அறிவித்தல் வழங்கப்பட்ட போதிலும், எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X