2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வவுனியாவில் இராணுவத்தினருக்கு குடியிருப்புகள்

Menaka Mookandi   / 2016 மார்ச் 24 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வவுனியாவில் இராணுவத்தினருக்கு குடியிருப்பு வீடுகள் நிர்மாணிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர்களால் இன்று வியாழக்கிழமை (24), ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் தம்முடன் முன்னரே கலந்தாலோசிக்கவில்லை என்பதால், இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களால் கலந்துகொள்ள முடியாது எனத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பின்னர் இந்த ஆர்ப்பாட்டத்தின் கருப்பொருளின் நியாயத்தன்மையைக் கருத்திற்கொண்டு இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றோம் என்றனர்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற போதே, சபை மண்டபத்தில் உறுப்பினர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X