Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வாகனத் தரிப்பிடம் தவிர்ந்த ஏனைய இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கிரமமான முறையில் வரி அறவிடுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம், இன்று (06), மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, யாழ்ப்பாணம் நகரில், வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்துமாறு கோரி, யாழ்ப்பாண மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.லோகதயாளனால் விசேட பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது.
இதன்போது, யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் முகமாக, வாகனத் தரிப்பிடம் தவிர்ந்த ஏனைய இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, கிரமமான முறையில் வரி அறவிடுவதென, உறுப்பினர் லோகதயாளன் முன்மொழிந்தார்.
இதையடுத்தே, உறுப்பினர் லோகதயாளனால் முன்னெமாழியப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
19 minute ago
35 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
35 minute ago
44 minute ago