Editorial / 2020 ஜூன் 25 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
மிருசுவிலில், தமிழர்களைக் கொலைசெய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பை வழங்கும் தென்னிலங்கைக் கட்சிகள், வடக்கு - கிழக்கில் வாக்குக் கேட்பதற்கு அருகதை இல்லையென, என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடக்கு – கிழக்கில், தென்னிலங்கையைச் சேர்ந்த தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் தொடர்பில், இன்று (25) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தமிழர்களுக்கு ஒரு நீதி, இராணுவத்தினருக்கு ஒரு நீதி என்றே இந்த நாடு பயணிக்கிறதெனவும் தமிழர்களின் இனப் பிரச்சினையில் கூட சிங்கள அரசாங்கம் அக்கறையற்ற நிலைப்பாட்டிலேயே உள்ளதெனவும் குற்றஞ்சாட்டினார்.
தமிழர்களின் அனைத்து விடயங்களிலும் காலை வாருகின்ற செயற்பாட்டை முன்னெடுக்கும் தென்னிலங்கை தேசியக் கட்சிகள், வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்பதற்கு அருகதை இல்லையெனவும், சிவஞானம் தெரிவித்தார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025