2025 ஜூலை 17, வியாழக்கிழமை

’வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதவிடின் போராட்டங்களை முன்னெடுப்போம்’

Editorial   / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதவிடத்து, போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக, வடமாகாண தொண்டராசிரியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வடமாகாண தொண்டராசிரியர்கள், கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் நேற்று (30) சந்திப்பொன்றில் ஈடுபட்டனர். இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நீண்ட காலமாக, எவ்வித ஊதியமும் இல்லாது தாம் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டதாகத் தெரிவித்த இவர்கள், தம்மையும் நிரந்த நியமனத்துக்கு உள்வாங்குவதற்கான, அமைச்சரவை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.

வடக்கில் நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாகச் சேவையாற்றி வரும் அதிகமானோரில் குறிப்பிட்ட சிலருக்கே இவ்வாறு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பில், வடமாகாண கல்வி அமைச்சருடன் தாம் கலந்துரையாடியதாகவும், இதன்போது சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதவிடத்து, போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X