2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வானிலையால் இருவர் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில் ஏற்பட்டு உள்ள வானிலை மாற்றத்தால் வயோதிபர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நேற்று (08) அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கைதடி நுணாவில் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் கடோற்கசன் (வயது 68) மற்றும் மீசாலை வடக்கை சேர்ந்த முருகன் கிருஷ்ணன் ( வயது 96) ஆகிய இருவருமே அவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி பொலிஸார், வானிலை மாற்றத்தால் தற்போது ஏற்பட்டு உள்ள குளிர் கால நிலையால் இருவரும் உயிரிழந்தனர் என அறிக்கை தாக்கல் செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X