2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

’வாயிலுக்குப் பூட்டுப்போட்ட சம்பவம்’

க. அகரன்   / 2018 ஜூலை 09 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கு பிரதியமைச்சுப் பதவி கிடைத்ததும், அதனை தாங்க முடியாமல் அநாகரிகமான முறையில் சில அரசியல்வாதிகள் நடந்துகொள்வதாக, பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

அத்துடன், வரவேற்பு நிகழ்வு நடைபெறவிருந்த பாடசாலையின் வாயிலை மூடிய காவலாளி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தீவிர ஆதரவாளர் ஆவார் எனவும் குறிப்பிட்டார்.

செட்டிகுளத்தில் நேற்று  (08) நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

வரவேற்பு நிகழ்வுக்கான அனுமதிகள் பெறப்பட்டருந்த போதும், அதிகாரம் படைத்த அரசியல் வாதி ஒருவர் தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டு நிகழ்வு நடைபெறவிருந்த பாடசாலையின் வாயிலை மூடி விட்டதாகக் குற்றஞ்சாட்டிய அவர், பாடசாலையை மூடிய காவலாளி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தீவிர ஆதரவாளராவாரெனவும் குறிப்பிட்டார்.

வழமையாகவே தாமதமாக மூடவேண்டிய வாயிலை, நேரத்துடன் மூடி இருக்கிறார்களெனக் குறிப்பிட்ட அவர், எங்கு நாம் வளர்ந்து விடுவோமோ என்ற பயத்தின் காரணமாகவே, சில அரசியல்வாதிகள் அவ்வாறு செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

பிரதியமைச்சு கிடைத்ததும், அதனை தாங்கிக்கொள்ளமுடியாமல் அநாகரிகமான முறையில் நேற்று (சனிக்கிழமை) நடந்துகொண்டதாகத் தெரிவித்த அவர், அந்தக் கட்சி சார்ந்த அதி தீவிர போக்குடைய ஒரு சிலரே அவ்வாறு செயற்பட்டனரெனவும் குறிப்பிட்டார்.

இப்படி கேவலம் கெட்ட அரசியல் செய்வதற்கு, சம்மந்தப்பட்ட அரசியல்வாதி வேறு எதுவும் செய்யலாம் என்று, அக்கட்சி சார்ந்தவர்களே கூறுகிறார்களென, அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .