Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மே 20 , பி.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
போதை பொருளை மீட்பதற்காக வாய்க்குள் கைவிட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரின் கை விரல்களை, சபரொருவர் கடித்தச் சம்பவமொன்று, வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில், நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது.
வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில், போதை பொருள் வியாபாரம் நடைபெறுவதாக, நேற்று (19) இரவு கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து, பொலிஸார் அவ்விடத்துக்கு விரைந்தனர்.
அவ்வேளை அங்கிருந்த இளைஞன் ஒருவர் பொலிஸாரைக் கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கவே, பொலிஸார் அவரைத் துரத்திப் பிடித்தனர்.
இதன் போது, அவ்விளைஞன், தனது உடமையில் இருந்த போதைப்பொருள் பக்கெட்டை விழுங்குவதற்காக வாய்க்குள் போட்ட போது, விரைந்து செயற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர், இளைஞனின் வாய்க்குள் கைவிட்டு போதைப்பொருளை மீட்க முயற்சித்துள்ளார்.
இதன்போது அவ்விளைஞனர் பொலிஸ் உத்தியோகஸ்தரின் கை விரல்களை கடித்துள்ளார். இருந்த போதிலும் பொலிஸார் விடாது, அவரது வாய்க்குள் இருந்து போதைப்பொருளை மீட்டனர்.
இதையடுத்த, அவ்விளைஞனைப் பொலிஸார் கைதுசெய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
44 minute ago
1 hours ago