2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

வாள்வெட்டில் 3 வயது சிறுமி பலி

Editorial   / 2018 ஜனவரி 19 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

யாழ்.வண்ணார்பண்ணை பகுதியில் வாள்வெட்டுச்சம்பவம் ஒன்று இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் 3 வயதுடைய நித்தியா என்ற சிறுமி உயிரிழந்ததுடன், சிறுமியின் பாட்டி படுகாயங்களுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை வாள்வெட்டை மேற்கொண்ட, உயிரிழந்த சிறுமியின் சித்தப்பாவான குணரத்தினம் ஈஸ்வரன் (வயது 33) என்பவரும் விசமருந்தி உயிரிழந்துள்ளார்.

குடும்ப தகராறு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .