Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2019 ஜனவரி 01 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொக்குவில் காந்திஜீ சனசமூக நிலைய பகுதியில் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொள்ளும் நோக்குடன் வந்த குழுவினை அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து இன்று (01) மதியம் மடக்கி பிடித்துள்ளனர்.
சுமார் 20 க்கும் மேற்பட்ட நவீனரக மோட்டார் சைக்கிள்களில் 40 க்கும் மேற்பட்டோர் வாட்களுடன் அப்பகுதியில் தாக்குதல் நடத்தும் நோக்குடன் வந்துள்ளனர்.
அதன் போது அங்கு கூடிய அப்பகுதி பொதுமக்கள் தாக்குதல் மேற்கொள்ள வந்த குழுவை மடக்கி பிடிக்க முற்பட்டுள்ளனர். அப்போது குழுவினர் தப்பி செல்ல முயன்ற போது, தமது 7 மோட்டார் சைக்கிள்களை கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர். தப்பியோடியவர்களில் நால்வரை மக்கள் ஒன்றிணைந்து மடக்கி பிடித்துள்ளனர்.
தம்மால் பிடிக்கப்பட்ட வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த நால்வரையும், மீட்கப்பட்ட 7 மோட்டார் சைக்கிள்களையும் யாழ்ப்பாண பொலிஸாரிடம் அப்பகுதி மக்கள் ஒப்படைத்துள்ளனர்.
நால்வரையும் கைது செய்ய பொலிஸார் மீட்கப்பட்ட 7 மோட்டார் சைக்கிளையும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், தப்பி சென்றவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago