Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 16 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன், தனது தேர்தல் நடவடிக்கைக்காக தமிழ் மக்களிடம் பணம் கேட்டமை தவறு இல்லையெனத் தெரிவித்த வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஆனால், தனது கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்கள் ஏழைகள் என்று கூறியதற்குப் பதிலாக ஒரு சிலர் வசதி குறைந்தவர்கள் என்று கூறியிருக்கலாமென்றும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் - நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில், இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஜனநாயகப் போராளிகள் கட்சி இன்றுவரை அனுசரணை வழங்கியே செயற்பட்டு வருவதாகவும் எதிர்காலத்திலும் அவர்கள் இணைந்தே செயற்படுவார்களெனவும் கூறினார்.
அத்தடன், “தற்போதைய தேர்தல் சூழ்நிலையில், அண்மையில், தனது தேர்தல் அரசியல் நடவடிக்கைக்காக சி.வி. விக்னேஸ்வரன் மக்களிடம் பணம் கேட்டிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். தேர்தல் நேரத்தில் அவர் பணம் கேட்பது தவறு அல்ல. எனினும் அவர் ஒரு விடையத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
“அதாவது தனது கட்சியில் உள்ள வேட்பாளர்கள் ஏழைகள் என்று தெரிவித்துள்ளார். அதில் சந்தேகம் உள்ளது. ஏனெனில் அவரது கட்சியிலுள்ள வேட்பாளர்களில் எனக்குத் தெரிந்தவரை யாரும் ஏழைகள் இல்லை. ஒருவேளை அவர்கள் அவரின் வேட்பாளர்களில் ஒரு சிலர் வசதிகுறைந்தவர்களாக இருக்கலாம். எனவே, விக்னேஸ்வரன் தனது வேட்பாளர்கள் ஏழைகள் என்று கூறுயதைக்காட்டிலும், ஒரளவு வசதி குறைந்தவர்கள் என்று கூறியிருக்கலாம்” எனவும், சிவஞானம் தெரிவித்தார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago