சொர்ணகுமார் சொரூபன் / 2018 ஏப்ரல் 17 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் காணப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் சிதைவடைந்துள்ளன.


கடந்த 28 வருடங்களாக மேற்படி பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது, இப்பகுதிகள் பகுதி பகுதியாக விடுவிக்கப்பட்டுகின்றன.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி மயிலிட்டி வடக்கு ஜே.240, தையிட்டி கிழக்கு ஜே.247, மயிலிட்டி வடக்கு ஜே.246 ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன.
இந்த பிரதேசத்தில் உள்ள கட்டுவன் வைரவர் ஆலயம், வீரபத்திரர் ஆலயம், மயிலிட்டி வடக்கு சகஜா மாதா தேவாலயம் ஆகியன முற்றாக சேதமடைந்து காணப்படுவதோடு விக்கிரகங்கள் காணமல் போயும், இடமாற்றப்பட்டும், சிதைவுற்றும் காணப்படுகின்றன.

மக்கள் தமது காணிகளை ஆலயங்களை வைத்து அடையாளம் கண்டு துப்பரவு செய்து வரும் நிலையில் தமது வழிபாட்டுத்தலங்களில் விக்கிரகங்கள் இல்லாவிடினும் ஆலயத்தை சுத்தம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
39 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago