Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 26 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடம் கல்வியற்றுறையினால், ஈராண்டு பகுதிநேரப் பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கைநெறி 2017/ 2019க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பின்வரும் தகமையுடையவர்கள், இதற்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்பதாரி, அரசாங்கப் பாடசாலையொன்றில் பட்டதாரி ஆசிரியராகக் கடைமையாற்றுதல் வேண்டும். அல்லது கல்வித் திணைக்களத்தில், கல்வி நிர்வாக அதிகாரியாக கடைமையாற்றுதல் வேண்டும். அல்லது அரசாங்கப் பாடசாலைகளில் அதிபர்களாக கடைமையாற்றுதல் வேண்டும். அத்துடன், விண்ணப்பதாரிகள் 2018.01.31 அன்று, 50 வயதுக்கு குறைந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக காசாளரிடம் 100 ரூபாய் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டினைச் சமர்பித்து, பிரதிப்பதிவாளர் கலைப்பீடம் அவர்களிடமிருந்து இக்கற்கைநெறிக்கான விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக்கொள்ள முடியும்.
அல்லது www.arts.jfn.ac.lk என்ற இணைத்தளத்தினூடாக விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து, கட்டணத்தை மக்கள் வங்கி பல்கலைக்கழக கிளையில் உள்ள 162-1-001-6-0000880 என்ற கணக்கில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் வைப்புச் செய்து, அப்பற்றுச் சீட்டினை விண்ணப்படிவத்துடன் இணைத்து அனுப்புதல் வேண்டும். பற்றுச்சீட்டின்றி அனுப்பப்படும் விண்ணப்பங்கள் யாவும் நிராகரிக்கப்படும்.
இக்கற்கை நெறிக்கான கட்டண விபரங்களாக, பதிவுக்கட்டணம்: ரூ. 750, கற்கைநெறிக் கட்டணம்: ரூ. 10,000, நூலக வைப்புக் கட்டணம் (மீளப் பெறத்தக்கது) ரூ. 5,000, நூலகக் கட்டணம்: ரூ. 750 என, மொத்தமாக 12,000 ரூபாய் செலுத்தப்படல் வேண்டும்.
மாணவர் தெரிவு பின்வரும் நிபந்தனையின் அடிப்படையில் இடம்பெறும்.
எழுத்து தேர்வில் ஆகக் குறைந்தது 45 புள்ளிகள் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். பொது விவேகம் கல்வியல் பொதுத்தகமை ஆகிய பாடங்கள், பரீட்சையாக இடம்பெறும். மற்றும் நேர்முகத் தேர்வுகள் இரண்டிலும், பெறுபேறுகளுக்கமைய தெரிவுகள் இடம்பெறும். அத்துடன் கற்கைநெறிக்கு தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரிகள், பல்கலைக்கழகத்திலிருந்து 25 மைல் சுற்றாடலுக்குள் அமைந்துள்ள பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். மேற்குறிப்பிட்ட இடமாற்றக் கடிதத்தை, இக்கற்கைநெறிக்குப் பதிவு செய்யும் போது, தவறாது சமர்பித்தல் வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்கள் யாவும், தபாலுறையின் இடதுபக்க மேல் மூளையில் பகுதிநேரப் பட்டப்பின் கல்வித்தகமை டிப்ளோமா நெறி 2017 / 2019 எனக் குறிப்பிட்டு, 2018.01.31ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ கிடைக்கக்கூடியவாறு, பிரதிப்பதிவாளர், கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு, பதிவுத்தபால் மூலம் அனுப்பி வைத்தல் வேண்டும்.
விண்ணப்ப முடிவுத் திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் யாவும் நிராகரிக்கப்படும் என, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025