Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மே 21 , மு.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தில், சுகாதார விதிமுறைகளை பொலிஸார், தாங்கள் சுகாதார விதிமுறைகளப் பேண தவறியதாக சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் போலியானதெனவும் அவை திட்டமிட்டு உருவாக்கப்பட்டவையெனவும், பொலிஸார் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் செயலாளர் உட்பட 11 பேரை தனிமைப்படுத்த வேண்டுமென, ஞாயிறுக்கிழமை (17), யாழ்ப்பாணப் பொலிஸார் யாழ். நீதவானிடம் கட்டளைப் பெற்றிருந்தனர்.
குறித்த கட்டளையை மீள பெற வேண்டுமென, நகர்த்தல் பத்திரத்தை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், மன்றில், திங்கட்கிழமை (18) சமர்ப்பணம் செய்தனர்.
அவ்வேளை யாழ்ப்பாண பொலிஸார் சுகாதார விதிமுறைகளை பேணாது செயற்படுவதாகக் கூறி, ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த புகைப்படங்களை மன்றில் ஒப்படைத்தனர்.
சுகாதார விதிமுறைகளை தாம் கடைப்பிடித்ததாகத் தெரிவித்த பொலிஸார், குறித்த படங்கள் போலியானவையெனவும் அவற்றில் உண்மை இல்லையெனவும், மன்றில் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை (15), யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள், பல்கலைக்கழக வாயிலில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சுடரேற்றினர்.
இதன்போது,அவ்விடத்துக்கு வந்த பொலிஸாரில் இருவர், முகக் கவசங்கள் அணியாதும் கைகளுக்குக் கையுறை அணியாதும் பல்கலைக்கழக மாணவர்களின் அடையாள அட்டைகளை வாங்கி பதிவுகளை மேற்கொண்டனர்.
இதையடுத்து, இது தொடர்பான புகைப்படங்கள் ஊடகவியலாளர்களால் எடுக்கப்பட்டு, ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகின.
இந்நிலையில், அந்தப் புகைப்படங்கள் போலியானவை எனவும் அவற்றில் உண்மையில்லை எனவும் அவை வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட படங்கள் எனவும், பொலிஸார், நீதிமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago