2025 மே 08, வியாழக்கிழமை

விதிமுறையை மீறும் அரசியல்வாதிகள்

Niroshini   / 2020 நவம்பர் 09 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடக்கில், அதிகாரத்தில் உள்ளவர்களும் அரசியல்வாதிகளும் சுகாதார விதிமுறைகளையும் தனிமைப்படுத்தல் சட்டங்களையும் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நாட்டில், தற்போது காணப்படும் கொரோனோ வைரஸ் தொற்று அபாயத்தில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு, சுகாதார விதிமுறைகளையும் தனிமைப்படுத்தல் சட்டத்தையும், அரசாங்கம் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களிடம் அச்சட்டம் கடுமையாக பிரயோகிக்கப்படுகின்ற போது, விதிமுறைகளை மீறி செயற்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் கணக்கில் எடுக்கப்படாமல் இருப்பதாகவும், மக்கள் சாடியுள்ளார்கள்.

குறிப்பாக, யாழ். மாவட்டச் செயலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டங்களுக்கு, கொழும்பில் இருந்து வந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டமை தொடர்பில் மக்கள் கடும் விசனம் தெரிவித்து வந்ததுடன், ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும், கடுமையான விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன.

இந்நிலையில், யாழ். துரையப்பா விளையாட்டரங்கை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் பார்வையிட்டார்.

இதன்போது யாழ்.மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் முகக்கவசம் அணியாது, அதனை கைகளில் சுற்றியவாறு சமூக இடைவெளியை பேணாது, அருகில் நின்று உரையாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X