2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விதைகளை சேகரிக்க நடவடிக்கை

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சிறப்பாக மரபு ரீதியாக பாதுகாக்கப்பட்டு வந்த விதைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, மாவட்ட செயலக விவசாயப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயம் முதன்மை வாழ்வாதாரமாக உள்ளது. விவசாயிகள் முன்னைய காலங்களில் இருந்து பல்வேறு பயிர்களை நடுகை செய்கின்னறனர். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பயிர் வெவ்வேறு வகைகளில் உள்ளது. அது பாரம்பரிய நல்ல இனமாக காணப்படும் விதைகளாகும்.

உதாரணமாக, மட்டுவில் கத்தரிக்காய் ஏனைய கத்தரிக்காய்களை விட வடிவம் மற்றும் சுவையில் மாறுபட்டது. அதே போன்று மிளகாய், வெண்டி போன்ற பல்வேறு பாரம்பரிய இனங்கள் எமது மாவட்டத்தில் உள்ளன.

புதிய விதை இனம் ஒன்ற அறிமுகப்படுத்தும் போது இவ்வாறான பாரம்பரிய இனங்கள் அழியம் நிலை ஏற்படும். ஆகவே, இந்த பாரம்பரிய விதை இனங்களை பாதுகாத்து வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் எமது இருப்பு பலமாக இருக்கும்.

பெரதெனியாவில் உள்ள மரபு விதைகளைப் பாதுகாக்கும்  ஆய்வு கூடத்தில் இந்த விதைகளை சேகரித்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாரம்பரிய விதைகளை விவசாயிகளிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X