2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘விதை உருளைக்கிழங்கு வழங்க நடவடிக்கை’

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு, மானிய விலையில் விதை உருளைக்கிழங்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயத் திணைக்களத்தினர், இதற்கமைய, 45 மில்லியன் ரூபாய் செலவில் 230 மெற்றிக் தொன் விதை உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் கூறினர்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், ஒவ்வொரு விவசாயிக்கும் தலா ஆயிரம் கன்று (நான்கு பரப்பு) நிலத்தில் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு ஏற்றவகையில், மூன்று பெட்டிகள் (50 கிலோகிராம் ) வழங்கப்படவுள்ளனவெனவும் தெரிவித்தனர்.

பரீட்சார்த்த அடிப்படையில், வடமராட்சி தீவகம் ஆகிய பிரிவுகளில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு, மட்டுப்படுத்தப்பட்ட அளவில், இந்த விதை உருளைக்கிழங்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும், அவர்கள் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X