Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூன் 08 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறுதி தீர்மானம் மேற்காள்ளப்படும் வரை, கரைவலை மீன்பிடி முறையில், வின்ஞ் பொறிமுறை (இயந்திர சுழலி) பயன்படுத்துவதை இடைநிறுத்துமாறு, கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.
வடமாராட்சி வடக்கு, வடமாராட்சி கிழக்கு ஆகிய பிரதேசங்களில், கரை வலை முறையிலான கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்கள், உளவு இயந்திரத்தில் வின்ஞ் பொறிமுறையைப் பயன்படுத்துவது தொடர்பில் ஆராயும் மீளாய்வுக் கூட்டம், இன்று நடைபெற்றது. இதன்போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்தக் கூட்டத்தின் போது, வின்ஞ் பொறிமுறையைப் பயன்படுத்தப்படுவதால் பாரம்பரிய சிறுதொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாவும் கடல் வளத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும், வடமாராட்சி வடக்கு, வடமாராட்சி கிழக்கு மீனவர் பிரதிநிதிகளினால் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதேவேளை, கரைவலைச் செயற்பாட்டுக்குத் தேவையான தொழிலாளர் பற்றாக்குறை, காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால், உழவு இயந்திரம் மற்றும் வின்ஞ் பொறிமுறைப் பயன்பாட்டைத் தெரிவு செய்துள்ளதாகத் தெரிவித்த கரைவலை தொழிலில் ஈடுபடும் தரப்பினர், அதற்காக தாங்கள் பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வின்ஞ் பொறிமுறையைப் பயன்படுத்தப்படுவதால் ஏற்படக் கூடிய சாதக, பாதகங்கள் தொடர்பில், “நாரா” எனப்படும் நீர் வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடாக, விஞ்ஞானபூர்வ ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அதனடிப்படையில், இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தார்.
மேலும், மேற்கொள்ளப்டுகின்ற தீர்மானம் கடல் வளத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத, நியாயமானதாக இருக்க வேண்டும் என்பதில், தான் உறுதியாக இருப்பதாகவும், டக்ளஸ் தேவானந்தா கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago