Niroshini / 2021 டிசெம்பர் 14 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
அச்சுவேலி - செல்வச்சந்நிதி பிரதான வீதியில், நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இரு குடும்பஸ்தர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
அச்சுவேலியில் இருந்து தம்பாளை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், கதிரிப்பாய் பகுதியிலிருந்து அச்சுவேலி நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலும், பத்தமேனி சந்தியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், ஆபத்தான நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், அச்சுவேலி - தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆனந்தராசா சயந்தன் (வயது 30 ), தம்பாலை - அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த எஸ் கஜன் (வயது 42) ஆகியோரே, காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025