Freelancer / 2022 நவம்பர் 09 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம்- நுணாவில் பகுதியில் நேற்று (08) இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஏ9 வீதி ஊடாக பயணித்த பேருந்துடன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் வெற்றிலைக் கேணிப் பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 19 வயதான இரு இளைஞர்களே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (a)

43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
2 hours ago