Editorial / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.விஜயவாசன், எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில், இன்று (04) காலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
சரசாலை வடக்கைச் சேர்ந்த க. விக்னேஸ்வரன் (வயது 55) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த நபர், பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சரசாலையில் இருந்து வியாபர நோக்குடன் யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் (ஏ. 9) சிறிய ரக உழவு இயந்திரத்தில் குறித்த இருவரும் பயணித்துகொண்டிருந்தபோது, அதே திசையில் வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் ஒன்று, உழவு இயந்திரத்தின் பின் பக்கமாக மோதியதிலேயே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதையடுத்து, ஹயஸ் வாகன சாரதியை கொடிகாமம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
8 minute ago
26 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
26 minute ago
44 minute ago
2 hours ago