Editorial / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் நேற்றிரவு (04) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தையடுத்து அப்பகுதியில் பொதுமக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டமையால், பொலிஸார் வானத்தை நோக்கிச் சுட்டு, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மானிப்பாய், கைத்தடி வீதி, உரும்பிராய் வான் மற்றும் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் சைக்கிளில் பயணித்த உரும்பிராய், அன்னங்கை பகுதியை சேர்ந்த குணசிங்கம் சுதன் (வயது 45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதனை அடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் , மல்லாகத்தை சேர்ந்த வான் சாரதியை பிடித்து நயப்புடைத்துள்ளனர். அதனால் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பில் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்துக்குச் சென்ற போது, பெருமளவானோர் ஒன்று கூடி அமைதியின்மையை ஏற்படுத்தி இருந்தனர். அதனால் பொலிஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விபத்தில் உயிரிழந்த நபரின் சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்ததுடன், வான் சாரதியை கைது செய்து, வானையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025