2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விளம்பரங்களைக் காட்சிப்படுத்த வரையறை விதிப்பு

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், விளம்பரங்களை காட்சிப்படுத்தும் போது, பொது மதில்கள், பொதுச் சுவர்கள், வீட்டுச் சுவர்கள் மற்றும் பொதுக் கட்டடங்களின் சுவர்களில், விளம்பரங்களைக் காட்சிப்படுத்த வேண்டாமென, யாழ்ப்பாணம் மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.

நிறுவனங்கள், பொது அமைப்புகள், தனியார் வர்த்தக நிறுவனங்கள், சினிமா திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றுக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்களின் விளம்பரங்களுக்கு மேலதிக விளம்பரப் பலகை தேவையெனில், மாநகர சபையில் விண்ணப்பிக்கும் சந்தர்ப்பத்தில், அதற்கான இட ஏற்பாடுகள் செய்து தரப்படுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X