2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விளம்பரங்களை ஒட்டுவதற்கு முற்றாக தடை

Editorial   / 2019 மார்ச் 21 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில், பொது இடங்களில், விளம்பரங்களை ஒட்டுவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக, யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆனால்ட் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை மீறி விளம்பரங்களை ஒட்டும் நிறுவனங்கள் நீதிமன்றங்களில் முற்படுத்தப்படுவார்கள் என்றும், மேயர் எச்சரிக்கை விடுத்தார்.

யாழ். மாநகர சபையில், இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் எந்த ஒரு நிறுவனங்களாக இருந்தாலும் விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற தீர்மானம் சபை உறுப்பினர் வ.பார்த்தீபனால் கொண்டுவரப்பட்டிருந்ததாகவும் அத்தீர்மானம் இறுக்கமான முறையில் நடமுறைப்பத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக தனியார் அல்லது அரச நிறுவனங்கள், அரசியல் சார்ந்த கட்சிகள், திரையரங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற எந்த நிறுவனங்களாக இருந்தாலும், அவர்கள் சார்ந்த விளம்பரங்களை பொது மக்களுடைய மதில்கள், சுவர்கள். அரச திணைக்களங்களில் சுவர்களிலோ, பொது இடங்களில் சுவர்களிலோ விளம்பரங்களை ஒட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த நிறுவனங்கள் அனைத்தும் இதுவரை காலமும் பொறுப்பற்ற விதத்தில் தாங்கள் நினைத்த படி பொது மக்களின் சுவர்களில் பசைகளை பூசி விளம்பரங்களை ஒட்டி வந்ததாகத் தெரிவித்த அவர், இனிவரும் நாள்களில் இவ்வாறு யாழ். நகரத்தை அசுத்தப்படுத்த அனுமதிக்க முடியாதெனவும் கூறினார்.

தேர்தல் காலங்களிலும் இந்நடவடிக்கை கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும். இவ்வாறு விளம்பரப்படுத்த தேவையானவர்கள் மாநகர சபையுடன் தொடர்பு கொண்டால் அதற்கேற்ற நடவடிக்கை சபையால் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X