2025 மே 15, வியாழக்கிழமை

’விளம்பரங்களை காட்சிப்படுத்த அனுமதி அவசியம்’

Editorial   / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசபயின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விளம்பரங்களை அமைத்தல் காட்சிப்படுத்தல் பிரதேசசபையின் அனுமதி பெறப்பட வேண்டுமெனத் தெரிவித்த புதுக்குடியிருப்பு பிரதேசசபைத் தவிசாளர் செ.பிறேமகாந், அவ்வாறு அனுமதி பெறப்படாத விளம்பரப் பலகைகள் பிரதேசசபையால் அகற்றப்படுமெனவும் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், 1987ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேசசபைகள் சட்டத்தின் 122(1) பிரிவுக்கு அமைவான துணைவிதியின் பிரகாரம் இந்தப் பிரதேசசபையின் நிர்வாகப் பிரிவிலுள்ள பொது வீதிகளின் இரு மருங்கிலும் அத்துடன் வர்த்தக நிலையங்களின் முகப்புக்களிலும் பொருத்தப்பட்டு காட்சிப்படுத்ப்படும் விளம்பரங்களுக்கு 28ஆம் திகதி முன் உரிய கட்டணத்தைச் செலுத்தி சபையின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களில் விளம்பரங்கள் இல்லாத பெயார்ப்பலகை ஒன்று மட்டும் காட்சிப்படுத்த முடியுமெனத் தெரிவித்த அவர், விளம்பரங்களுடான பெயர்ப்பலகை மற்றும் மேலதிகமாக உள்ள விளம்பரங்களுக்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .