2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

விஷமிகள் தீ வைப்பு; 20 பனை மரங்கள் தீயில் கருகின

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 19 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

உடுவில், தொம்பை வைரவர் கோவில் வளாகத்தினுள் நின்ற பனை மரங்களுக்கு விஷமிகள் தீ வைத்தமையால் 20 பனைகள் முற்றாக எரிந்து கருகியுள்ளன.

யாழ்ப்பாணம் - தொம்பை வீதியில் உள்ள தொம்பை வைரவர் கோவில் வளாகத்தை சூழ பனை மரங்கள் காணப்பட்டன. அவற்றுக்கே விஷமிகள் இவ்வாறு தீ வைத்துள்ளனர்.

பனை மரங்கள் திடீரென தீப்பற்றி எரிவதை அவதானித்த அயலவர்கள், உடனடியாக தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்தமையை அடுத்து , அவ்விடத்துக்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயணைப்புப் படையினர் விரைந்து செயற்பட்டமையினால், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எனவும், அதனால் அயலில் இருந்த தென்னம் தோட்டம் மற்றும் மேலும் பல பனை மரங்கள் தீயினால் அழிவடைந்திருக்கும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டமையை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X