2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வீடு புகுந்து கொள்ளை : இருவர் கைது

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெல்லிப்பளை பகுதியில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதுடன், வீட்டில் இருந்த பெண் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 2 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

தெல்லிப்பளை கட்டுவன் புலம் வீதியில் உள்ள வீடோன்றினுள் கடந்த சனிக்கிழமை (09) வீட்டின் ஜன்னல் கம்பிகளை வளைத்து அதனூடாக அதிகாலை வேளை உட்புகுந்த மூன்று கொள்ளையர்கள், வீட்டில் நித்திரையில் இருந்தவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, வீட்டினை சல்லடை போட்டு தேடி வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தினை எடுத்துள்ளனர். பின்னர் குடும்ப பெண்ணின் தாலிக்கொடியை பறிக்க முற்பட்ட போது, அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்க அவரின் தலையில் பலமாக தாக்கி தாலிக்கொடி உட்பட 17 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் நேற்று ஞாயிற்றுகிழமை (10) மாலை கட்டுவான் பகுதியில் ஒருவரும், தெல்லிப்பளை பகுதியில் ஒருவருமாக, இருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யபட்ட இருவரும் 19 வயதுடையவர்கள் எனவும், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை மீட்டுள்ளதாகவும், தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .