Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குழாய் பகுதியில் உள்ள வீடு ஒன்று தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஞாபயிற்றுக்கிழமை இரவு பதிவானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முகத்தை கறுப்பு துணியால் கட்டி வந்த நால்வர் உள்ளடங்கிய கும்பல் அத்துமீறி வீட்டினுள் பிரவேசித்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துடன் குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி, சோக்கேஸ் , சமையலறை உபகரணங்கள், தளபாடங்கள் என்பவற்றை அடித்து நொறுக்கி சேதம் விளைவித்துள்ளதுடன் இருமோட்டார் சைக்கள்களை எரித்து விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தடயவியல் பொலிஸார் திங்கட்கிழமை தடயங்களை ஆய்வு செய்துள்ளதுடன் வீட்டிலிருந்த 20 வயது இளைஞன் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
14 minute ago
19 minute ago
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
35 minute ago
1 hours ago