Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 16 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
நாட்டில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட நீண்ட விடுமுறைகாலத்தில் மாணவர்கள் வீட்டில் இருந்தபடி தமது கற்றல் செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டுமென, யாழ்ப்பாணம் வலயக் கல்விப்பணிப்பாளர் செ.சந்திரராஜா, மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,ஷ
பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தமக்குக் கிடைத்த விடுமுறையை நல்லமுறையில் பயன்படுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
இக்காலத்தில், வீட்டிலிருந்தபடி கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுவதுடன், நல்ல நூல்களை வாசிப்பதிலும் புத்ததாககக் கண்டுபிடிப்புகளிலும் மாணவர்கள் ஈடுபடுவதானது விடுமுறை காலத்தை உச்ச பயன்பாடுடையதாக ஆக்க முடியுமெனத் தெரிவித்த அவர், இதற்கு மேலாக சுயகற்றலிலும் ஈடுபடுவதானது ஆழ்ந்த அறிவுப் புலத்துக்கு அடிப்படையாக அமையுமெனவும் கூறினார்.
எனவே விடுமுறைக்கான காலத்தில் தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்புக்குள்ளும் அலைபேசி பாவனைக்குள்ளும் அகப்படாமல் மாணவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமானதெனவும், அவர் வலியுறுத்தினார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago