Freelancer / 2022 ஒக்டோபர் 14 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 08ஆம் திகதி கட்டுடை பகுதியில் உள்ள வீடொன்றின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த ஒரு இலட்ச ரூபாய் பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றனர்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களிடம் இருந்து 7 பவுண் தங்க நகைகளை மீட்டுள்ளதாகவும் அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (R)
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago