2025 மே 14, புதன்கிழமை

வீதிகளில் சீமெந்து கலவையிடத் தடை

Editorial   / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பகுதிகளில், கட்டுமானப் பணிகளுக்காக, வீதிகளில் சீமெந்து கலவையிடுவது தடை செய்வதென, சாவகச்சேரி நகரசபையால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன், இத்தடையை மீறினால், அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதெனவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வு, தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தலைமையில், அண்மையில் நடைபெற்றது. இதன்போதே, மேற்கண்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கட்டடப் பணிகளில் ஈடுபடுவோர், வீதிகளில் சீமெந்துக் கலவையிடுவதால் வீதியில் செல்வோர் சிரமங்களை எதிர்நோக்குவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்தே, இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .