2025 ஜூலை 05, சனிக்கிழமை

வீதிக்காக போராட்டம்

Editorial   / 2019 ஜூன் 21 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பொது வீதியை தனியார் ஒருவர் அபகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவ்வீதியை பொதுமக்களின் பாவனைக்காக விடுமாறும் கோரியும், நாளை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 

யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் அமைந்துள்ள கடை தொகுதிகளின் மத்தியில் குறித்த வீதி காணப்படுகின்றது. அதனை வீதிக்கு அருகில் உள்ள கடை உரிமையாளர் அபகரித்து அதனை தனது கடையுடன் இணைத்துள்ளமையால் அவ்வீதி ஊடாக போக்குவரத்து செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது. 

எனவே, குறித்த வீதியை பொது போக்குவரத்துக்கு திறந்து விட வேண்டும் என கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், நாளை காலை 10 மணிக்கு, குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .