2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வீதியில் சென்றபோது தீப்பிடித்த வாகனம்

Freelancer   / 2022 ஒக்டோபர் 22 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்று திடீரென்று தீ பிடித்து எரிந்துள்ளது. 

மாவிட்டபுரம் பகுதியில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று (21)  இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

வாகனம் திடீரென தீ பிடித்த நிலையில் அதனை அணைக்க பலரும் போராடிய நிலையில், காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து தீயணைப்பு வாகனம் அழைக்கப்பட்டும் தீயினை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வாகனம் முற்றாக எரிந்துள்ளது. 

வாகனத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே வாகனம் தீ பிடித்து இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X