Princiya Dixci / 2022 மே 04 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் சிறுவன் ஒருவன் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான்.
துன்னாலை பகுதியை சேர்ந்த மகிந்தன் நிரோஜன் (வயது 08) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
இச்சிறுவன், நேற்று (03) காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் , வீட்டுக்கு அண்மையில் உள்ள கோவிலுக்கு அருகில் வீதியில் மயங்கி விழுந்துள்ளான்.
அதனை அவதானித்தவர்கள் சிறுவனை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் , சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டான் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
உடல் கூற்று பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
14 minute ago
24 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
44 minute ago