Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2022 மார்ச் 28 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வாய்ப் பகுதியில் காயங்களுடன் காணப்பட்ட யானைக்குட்டி ஒன்று, வவுனியா, ஆச்சிபுரம் பகுதி பப்பாசித் தோட்டத்தில் இன்று (28) இறந்துள்ளது.
குறித்த தோட்டத்துக்குள் நுழைந்த 6 வயது மதிக்கத்தக்க யானைக்குட்டி உணவருந்த முடியாத நிலையில், தோட்டத்தில் இருந்து வெளியே செல்ல முடியாத நிலையில் காணப்பட்டுள்ளது.
அதேவேளை, யானைக்குட்டியைப் பார்வையிடச் சென்ற மக்களைத் துரத்தி அச்சமடைய வைத்துள்ளது. இதனை தொடர்ந்து பிரதேச வாசிகளால் வவுனியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
குறித்த திணைக்களத்தினரால் வட மாகாண கால்நடை வைத்தியர் கிரிதரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்குச் வைத்தியர் தலைமையிலான குழுவினர், வெங்காய வெடியை உட்கொண்டதனாலையே யானைக்குட்டி உணவை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அத்தோடு, யானைக்குட்டிக்கான சிகிச்சையையும் மேற்கொண்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி யானைக்குட்டி இன்று இறந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago