2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

வெளிவிவகார அமைச்சரின் கருத்துக்கு கண்டனம்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 14 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை  பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமான நிலையில், அங்கு கருத்துத் தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு, தமக்கு  சர்வதேச விசாரணையே தேவை எனவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகள் சங்க தலைவி மரியசுரேஷ்  ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் றஞ்சனா ஆகியோர், முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று (13) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கருத்துரைக்கையில்,  

“ஐக்கிய நாடுகள் மனித உரிமை  பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விடயத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது  விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையை தொடர்ச்சியாக கோரிவரும் எமக்கு  சர்வதேச விசாரணையை வலியுறுத்தி எந்த விடயமும் முன்வைக்கப்படாமையானது கவலையளிக்கிறது.

“இந்த கூட்டத்தொடரில் சர்வதேச விசாரணையை தொடர்பான தீர்மானம்  கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

“பாதிக்கப்பட்ட தரப்புக்களாக நாம்  இன்று 13 ஆண்டுகளாக போராடி எந்த்த தீர்வும் இல்லாது, சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆரம்பித்த  தொடர்ச்சியான போராட்டம்  இன்று 2,015ஆவது நாளாக தொடர்கிறது.

“இந்நிலையில், ஜெனீவாவில் கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்தானது எமது உணர்வுகளை புரந்தள்ளி, அரசை பாதுகாப்பதாக அமைந்துள்ளது” என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X