2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’வெளி மாவட்டத்தார் வந்தால் அறிவிக்கவும்’

Editorial   / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். நிதர்ஷன்

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இருந்து எமது மாகாணங்களுக்குள் யாராவது பிரவேசித்திருந்தால், அவர்கள் தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுக்கு உடனடியாக அறிவிக்குமாறும் இல்லாவிட்டால், மாகாண சுகாதாரப் பணிமனையின் அவசர இலக்கமான 021-2226666 என்ற இலக்கத்துக்குத் தகவல்களை வழங்குமாறும், வடக்கு மாகாண சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், வடக்கில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள சூழலில், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இருந்து, பாரவூர்தியில் 7 பேர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்கள். அவர்களுடன் பாரவூர்த்திச் சாரதியும் தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் தனிமைப்படுத்தல் மய்யத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்ர்” என்று கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X