2025 மே 14, புதன்கிழமை

வேட்புமனு தாக்கல்: வடக்கு இளையோர் ஆர்வம்

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா, சண்முகம் தவசீலன்

 

நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இன்று (11), நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது.

அந்த வகையில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலர், மாவட்டச் செயலகங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

முல்லைதீவு மாவட்டத்தில் இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்

இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேசச் செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 18 வயது முதல் 29 வயதுகிடைப்பட்ட இளைஞர், யுவதிகள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இம்முறை, வடக்கில் உள்ள இளைஞர் கழகங்களை சாராத இளைஞர்கள் மற்றும் யுவதிகள் ஆர்வமாக வந்து வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ததைக் காணக்கூடியதாக இருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .