Editorial / 2022 ஜனவரி 31 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். தில்லைநாதன்
யாழ். மாவட்டத்தின் வேலணை பிரதேசத்தில் திருவள்ளுவர் வீதியில் சில மாதங்களாக ஏற்பட்ட குடிநீர் கசிவு சீர் செய்யப்பட்டு, சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் வீதியில் குடிநீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பகுதியில் குடிநீர் விநியோகம் சில மாத காலமாக தடைப்பட்டிருந்தது.
இது தொடர்பாக, யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் எம்.பி தலைமையில், மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் நடவடிக்கை காரணமாக, உடனடியாக குறித்த பிரச்சினை சீர் செய்யப்பட்டு, திருவள்ளுவர் வீதியில் உள்ள குடும்பங்கள் பயனடையும் வகையில், குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago