Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன், எம். றொசாந்த்
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுநர் றெஜினோல் கூரே, யாழ். மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகம் ஆகியோரை இன்று (09) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். பட்டதாரிகளின் பணி நியமனம் தொடர்பாகவே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இது தொடர்பாக வேலையற்ற பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையில்,
“நாடாளாவிய ரீதியில் தேசிய கொள்கைகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சால் பட்டதாரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதில் 21 தொடக்கம் 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளை விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. 35 வயது தொடக்கம் 45 வயதுக்கு இடையில், வட மாகாணத்தில் 100 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் காணப்படுகின்றனர். அவர்களுடைய வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அது தொடர்பாக ஆளுநர், முதலமைச்சர், மாவட்டச் செயலர் ஆகியோரை சந்தித்தோம். ஆனால் சாதகமான முடிவு கிடைக்கவில்லை. அனைவரும் உரிய அதிகாரகளுடன் கதைப்பதாகக் கூறியுள்ளனர். இது எமது வாழ்க்கை பிரச்சினை. நூங்கள் அனைவரும் அசாதாரண சூழ்நிலையில், கடினத்துக்கு மத்தியில் கல்வி கற்றவர்கள். எனவே எமது நிலையை அரசியல்வாதிகள் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
அண்மையில், வேலையற்ற பட்டதாரிகள் மாவட்டச் செயலகம் முன்பாக 143 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது,ஓராண்டு பயிற்சிக் காலத்துக்குட்பட்டவாறு மாவட்ட அடிப்படையில் நியமனங்கள் வழங்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியமைக்கு அமைய கடந்த மாதம் 19ஆம் திகதி முதல் போராட்டத்தை தற்காலிகமாக, பட்டதாரிகள் கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
23 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Jul 2025